Saturday, May 28, 2011

மெல்லத் தமிழ் இனிச் சாகுமா??

”மெல்லத் தமிழ் இனிச் சாகும்” - இது பாரதியார் வாக்கு...

நானும் பல பேர் இந்த மாதிரி மேற்கோள் காட்டறதை பார்த்திருக்கேன். என்னடா இவர் எப்பவும் தமிழ வளர்க்கணும் வளர்க்கணும்ன்னுதானே சொல்லியிருக்கார்... எப்ப ஜோசியரா மாறி மெல்லத் தமிழ் இனிச் சாகும்ன்னு சொன்னாருன்னு யோசிச்சேன்.. Project madurai புண்ணியத்துல பாரதியார் கவிதைகள தரவிறக்கி வாசிச்சதுல இருந்தது இதுதான்

“மெல்லத் தமிழ் இனிச் சாகும்- அந்த
  மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

  என்றந்தப் பேதை உரைத்தான்- ஆ!
  இந்த வசையெனக் கெய்திடலாமோ?
  சென்றிடுவீர் எட்டுத் திக்கும்-கலைச்
  செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! “

இதுதாங்க அவர் சொன்னது. தமிழ்த்தாய் தன்னைப் பத்தி பெருமையெல்லாம் சொல்லிட்டு பழம் பெருமை மட்டும் பேசிட்டு திரிஞ்சீங்கன்னா என்னை நீங்களே கொன்னுடுவீங்க, அதுனால எல்லா ஊருக்கும் போய் அங்கல்லாம் எதெல்லாம் நல்லா இருக்கோ அதையும் தமிழ்ல எழுதுங்கப்பா, அப்பதான் நான் வாழ்வேன்னு சொல்றா...(தலைப்பு: தமிழ்த்தாய் , தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்)

நாம எப்பவும் போல வேலை செய்ய சோம்பேறித்தனம் பட்டுகிட்டு பாரதியாரே “தமிழ் இனி மெல்லச் சாகும்”ன்னு சொல்லிட்டாருப்பான்னு சொல்லிகிட்டு திரியறோம். நீங்களே யோசிங்க தமிழ் சாகுமா வாழுமான்னு...

3 comments:

  1. This is the impact of positive and negative ways of expressing views. For example, if a child is learning a cycle and you say to him, "Do not fall!" Invariably he will fall. His mind will be occupied on the thought of "not falling". But not falling is an abstract thought. It cannot be visualised unless one visualises the "falling". So, the child visualises the fall and as he imagines and recreates the fall repeatedly in his mind, eventually he does it! He falls!

    Instead tell him - "Keep a track on the road and your handle bar", "Give support on your legs, try to use them when in need" - these kind of easily imaginable positive statements will help.

    Probably, Subramaniya Bharathi did not know about all these!

    ReplyDelete
  2. Nay,, cant accept (arun),, whatever u say may be applicable for a small child, coz we are introducing new things to it,, so its our duty feed the positive first and then point out the outcome of negative too. In case of Bharathi,, its nt so, i dont suppose Bharathi's readers are children!!! Its the readers to mentality to take out whatever is more captive and hightlight it wherever is possible... "MUDAL SENTENCE PADICHAVANUKU MULUSUM PADIKA NERAM ILLAINA SOLRINGA???"... WELL ITS OUR MISTAKE NOT BHARATHIS'.


    KUDOS ANU GOOD JOB

    ReplyDelete