நேற்று ‘நாடோடிகள்’ என்ற படம் பார்த்தேன். நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்கள். வழியில் இழப்பும் இவர்களுக்கே.ஒருவன் காது கேட்கும் திறனை இழக்கிறான்.இன்னொருவன் காலையே இழக்கிறான். இன்னொருவன் பாட்டியையும் காதலையும் பறிகொடுக்கிறான்.இவ்வளவு பாடுபட்டு சேர்த்துவைத்த காதல் ஏதோ காரணங்களுக்காக பிரிந்து போகும்போது மூவரும் கோபப்படுகிறார்கள்.க்ளைமாக்ஸில் ஏதோ டயலாகெல்லாம் பேசி படம் முடிகிறது.
இதில் என்னுடைய கேள்விகள்:
1.காதலித்தவர்கள் ஓடிப்போய்தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமா? அதற்கும் நண்பர்கள் தயவு தேவையா? நண்பர்களின் உதவி ஓரளவு தேவைதான். ஆனால் இவ்வளவு இழப்பு?
2.சரி, ஒருவேளை காதலித்துக் கல்யாணம் முடித்தவர்களிடையே ஏதோ ஒரு கருத்து வேற்றுமை வந்து (இந்தப் படத்தில் காட்டுவது போலல்லாமல்) பிரிந்து விடுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்போது உதவி செய்த நண்பர்கள் கோபப்படுவது நியாயமா?
இந்த சமயத்தில் விசுவின் பழைய படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.(பெயர் மறந்து விட்டது). ரமேஷ் அரவிந்தும் கஸ்தூரியும் காதலர்கள். எப்பவும் போலவே வீட்டில் எதிர்ப்பு. ஆனால் சளைக்காமல் பெற்றோர் சம்மதிக்கும் வரைக் காத்திருந்தே கல்யாணம் என்ற உறுதியோடு இருப்பார்கள். இதற்கிடையே கஸ்தூரியின் தங்கைக்குத் திருமணம் ஆகும். கஸ்தூரியின் தந்தை தனக்கு ஒரே பெண் தான் என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனாலும் இவர்களிடையே இருந்த உறுதி கடைசியில் பெற்றோரைக் கரைக்கும்.
என்னைப் பொறுத்தவரை இதுதான் காதலின் வெற்றி. ஓடிப்போவது இல்லை. சரி எதுவுமே சரி வரவில்லையா, இருவரும் மனமொப்பி பிரிந்து விடுவது கூட வெற்றிதான். நடைமுறை சாத்தியம். அப்படிப் பிரிந்து விட்டவரைப் பார்த்து பரிகசிப்பது தேவையற்றது இல்லையா?