இப்போ இருக்கறது நைரோபி. ஊரப் பத்தி கேக்கவே வேணாம். இயற்கையான அழகு.
1980s பெங்களூரைப் பார்த்ததுண்டா. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் மரம். மரத்துல அழகான பூக்கள் குப்புன்னு பூத்து குலுங்கும். அப்போல்லாம் வருசத்துக்கு ஒரு தடவை அக்டோபர் நவம்பர்ல பெங்களூரு பயணம் உண்டு, பெரியப்பா வீட்டுக்கு. பாட்டி, தாத்தா தெவசம். அது என்னவோ ரெண்டு பேத்துக்கும் ஒரு வார கேப்பில தெவசம் வரும். ரொம்ப நாளைக்கு நான், பெரியவங்களாப் பாத்து வசதிக்காக வெச்சதுன்னு நெனச்சதுண்டு. அப்புறம்தான் அப்படியெல்லாம் தெவசத்த வைக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சது.
சரி விஷயம் என்னனா, இப்ப பெங்களூருல எல்லா இடத்துலயும் கட்டடம்தான் தெரியுது. ஆனா நைரோபியில 1980s பெங்களூரு மாதிரி மரமும், பூவும் உண்டு. கூடவே விதவிதமான பறவைகள். அத பத்தி சாவகாசமா photos போட்டு எழுதறேன்.
இப்படியான நைரோபியில (அப்பா! விஷயத்துக்கு வந்தாச்சு) ஹோட்டல்ஸ்க்கு பஞ்சமே கிடையாது. எல்லா விதமான உணவும் கெடைக்கும். Japanese, Chinese, European, Kenyan, Continental, Indian எல்லாம். சுத்தமான வெஜிடேரியன் ஹோட்டல் கூட இருக்குன்னா பாருங்களேன். இந்தியால கூட அந்த வசதி இல்ல. ஹைதராபாத்தில இருந்த/இருக்கிறவங்களுக்கு அது தெரியும். :-)
எதியோபியா சாப்பாடு நல்லா இருக்கும்னு கேள்விப் பட்டு போனோம். சாப்டதிலயே இதுதான் இந்திய சாப்பாட்டுக்கு உறவுன்னு சொல்லிக்கலாம். அவங்களோட இஞ்சேரா (இஞ்சேருங்கோ இல்ல Injera) நம்ம ஊரு ஆப்பம் மாதிரி இருக்கு. ஷிரோன்னு(shiro) ஒண்ணு அது நம்ம கொண்டை கடலய அரைச்ச கொழம்பேதாங்க. அப்புறம் மிஸிர் (misr) அது நம்ம ஊரு பச்ச பயிறு சுண்டல்! இதில ஷிரோதான் என் சாய்ஸ்.
பெர்பெரேன்னு (berbere) ஒன்னு கொடுத்தாங்க பாருங்க அது நம்ம இட்லி பொடியேதாங்க.. எப்படியோ நல்லா சாப்புட்டு பில்ல பாத்தா அதுவும் பட்ஜெட்டுக்குள்ளதான். (இங்கல்லாம் வெளியில போய் சாப்டா சொத்த எழுதி வாங்குவாங்கன்னு சொல்ல கடமை பட்டிருக்கேன்.)
இந்த சாப்பாடு ஒத்துமைய பாத்தா நெஜமாலுமே இந்தியா ஒரு காலத்துல ஆப்பிரிக்காவோட ஒட்டியிருந்து இருக்கலாமோன்னுதான் தோணுது. சுவையான இன்னொரு விஷயம் என்னன்னா நாம என்னிக்கோ மறந்து போன சாமை, வரகு இது மாதிரி ஒண்ணான டெஃப் (Teff) லதான் இந்த இஞ்சேரா செய்யறாங்க. எதியோபியா காலனியாதிக்கத்துக்கு உட்படாத நாடுங்கறது கூடுதல் தகவல்.
Details lam nalladan irku, photo nee samiachu eduthada? illa yaaro samaichada suttada? apram ipdi photo potta pathadu, idellam india varappo samaichum taranumakum!! purinjado? and btw its di(vasam) not de (vasam) lol!!! :) style of lang is good, keep blogging.
ReplyDeleteஅன்புள்ள அனுஷா,
ReplyDeleteரொம்ப நன்னாயிருந்தது,உன்னோட சமையல் பதார்த்தங்களின் வர்ணனை. நாங்களும் சாப்பிட்ட
மாதிரி இருந்தது.பேஷ்,பேஷ்..தொடர்ந்து இன்னும்
பல விஷயங்கலையும் எழுது.-பாலு மாமா, மாமி &
அக்கா.